ஜெயங்கொண்டம் அருகே சாலைவிபத்தில் மரணமடைந்த 16 பேருக்கு நினைவஞ்சலி
ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிபெருமாள் கிராமத்தில் கடந்த 2016ல் நடந்த கோரவிபத்தில் இறந்த 16பேருக்கு பொதுமக்கள் சார்பில் நினைவஞ்சலி அனுசரிக்கபட்டது. கச்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்த ராமநாதன் இவரது மைத்துனர் குமார் கடந்த 2016ல்அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் இறந்த 7ம்நாள் துக்ககாரிய நிகழ்ச்சிக்கு புதுக்குடி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்தது. இதற்காக கச்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்த ராமநாதனின் உறவினர்கள் மற்றும் பக்கத்து வீடுகளை சேர்ந்த பெண்கள் 24 பேர் லோடு ஆட்டோவில் புதுக்குடி சென்றனர். காரியம் முடித்து திரும்பி வரும்போது இரவு 8மணியளவில் கச்சிபெருமாள் பஸ்ஸ்டாப் அருகே செல்லும்போது எதிரே அரியலு£ரிலிருந்து சிமெண்ட் பவுடர் ஏற்றிவந்த லாரி லோடுஆட்டோ மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் அதே ஊரை சேர்ந்த ராஜகுமாரி(55), காசியம்மாள்(45), காமாட்சி(45), முனியம்மாள்(60), செந்தாமரை(50), சரஸ்வதி(50) அன்னமயில்(50), அமுதா(52), வளர்மதி(45), சாந்தி(45), ராணி, வாசுகி, செல்வி, சித்ரா, மருதுபாண்டியன், மணிகண்டபிரபு ஆகிய 16பேர் இறந்தனர். விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 16பேர் இறந்தசம்பவம் கச்சிபெருமாள் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவர்களுக்கு நேற்று காலை இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் தனசேகர், மணிமாறன், நகர செயலாளர் கருணாநிதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரிமுத்து, கலியபெருமாள், சூரியமணல் தருமதுரை, உள்ளூர் பிரமுகர்கள் முருகையன், சேட்டு, உட்பட இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கலந்துகொண்டு தீபம் ஏந்தி மவுனஅஞ்சலி செலுத்தினர்