ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சனிக்கிழமை நவம்பர் 5 ந்தேதியன்று 16 வது விளையாட்டு தினம் பள்ளியின் முதல்வர் முனைவர் சசிதா தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது
விளையாட்டு தினத்திற்கு சிறப்பு விருந்தினராக விக்ரம் சாராபாய் விண்வெளி மைய விஞ்ஞானி சசிகுமார் மற்றும் திராவிட கழகம் அரியலூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ் கலந்து கொண்டனர். முதலாவதாக பள்ளி மாணவர் தலைவன் எஸ் பாலமுருகன் ஒலிம்பிக் சுடர் ஏந்தி வர ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட பின்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இருபால் ஆசிரியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றது. மாணவர்களின் பெற்றோர்கள் தங்களை ஒரு குழந்தையாக பாவித்து ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வென்ற பெற்றோர்களுக்கு சான்றிதழ் வழங்கிய சிறப்பு விருந்தினர்கள் தங்களது உரையில் உடலுக்கும் மனதிற்கும் உறுதியை தரக்கூடிய யோகக்கலையின் சிறப்புகளை எடுத்துரைத்தும் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் செய்து காண்பித்த பயிற்சிகளும் கண்கொள்ள காட்சியாக இருந்தன என்று கூறி மாணவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.