ஜெயம்கொண்டம் அருகே ஜல்லிக்கட்டு காளைகளோடு காளையர்கள் மோதினார்கள்
ஜெயம்கொண்டம் அருகே உள்ள பூவாயிகுளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அரியலூர் தஞ்சாவூர் பெரம்பலூர் உள்ளிட்ட பலமாவட்டங்களில் இருந்து சுமார் நானூறு காளைகளும் இவற்றை அடக்க இருநூறு மாடுபிடி காளையர்களும் களத்தில் இறங்கினர்
பல மணி நேரம் நீடித்த ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களும் காளைகளும் பரிசுகளை தட்டி சென்றனர் இந்த வீர விளையாட்டில் ஐந்து வீரர்களுக்கு மாடுபிடிக்கையில் காயம் ஏற்பட்டது