mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / டி.வி சீரியலில் வரும் கதாநாயகி, கதாநாயகனுக்கு ஒரு இக்கட்டான நிலை வரும் போது நிச்சயம் இவர் தோன்றுவார்.

டி.வி சீரியலில் வரும் கதாநாயகி, கதாநாயகனுக்கு ஒரு இக்கட்டான நிலை வரும் போது நிச்சயம் இவர் தோன்றுவார்.

டி.வி சீரியலில் வரும் கதாநாயகி, கதாநாயகனுக்கு ஒரு இக்கட்டான நிலை வரும் போது நிச்சயம் இவர் தோன்றுவார். ஆலோசனையோ, ஆறுதலோ சொல்வார் அவர் தான் மெகா சீரியல்களில் நடித்து வரும் சிவஸ்டாலின்வர்ணமுருகு.அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே உள்ள கருப்பிலாக்கட்டளை என்ற சிற்றூரை பூர்வீகமாக கொண்டாலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை தான்.

கேளடிகண்மணி,காக்க காக்க,கல்யாணமாம் கல்யாணம் ,யாரடி நீ மோகினி மகாலெஷ்மி, கல்யாணபரிசு என தொடர்ந்து உங்கள் வீட்டு ன்னதிரையில் வரும் சாமியா

ரிடம் பேட்டி என்றோம்.

சிவ சிவ கேளுங்க என்றார்
அது என்ன ஸ்டாலின் வர்ண முருகு ?

சிவனை விட்டுட்டிங்களே ? என்றபடியே தாய்,தந்தை தானே நமக்கு முதல் தெய்வம் அம்மா பஞ்சவர்ணத்தில் வர்ணமும்,அப்பா முருகேசனில் முருகுவும் எம்பெருமான் சிவ நாமத்தையும் எனது பெயரோடு இணைத்து சிவ ஸ்டாலின் வர்ணமுருகு ஆகிவிட்டேன் என சிரிக்கிறார்.


கலைத்துறையில் சாமி கால் பதித்தது எப்போது ?
2006 வாக்கில் குமரகுருபரன் சார் என்னை ஷெட்யூல் டைரக்டர் வேலைக்கு சேர்த்தார் அது முதல் சின்னதிரையி இருக்கேன்.நடிக்க எப்போ வந்தீங்க ?நான் பெரும்பாலும் ஆபீஸ் சம்பந்தப்பட்ட வேலைகளைத்தான் பார்த்து கொள்வேன். யாராவது ஆர்ட்டிஸ் வரலை அல்லது உடனே தேவைன்னா என்னைய சின்ன சின்ன வேஷத்துல நிக்கவைப்பாங்க.ஒரு நாள் டைரக்டர் அழகர் சார் உனக்கு நடிப்பு வரும் நல்லா செய்வேன்னு சொல்லி வேந்தர் டிவியில் வந்த ஏழாம் உயிர் தொடரில் சங்கு சாமியார் கேரக்டர் கொடுத்து உலகம் முழுதும் என்னை பதிய வைத்தார் தொடர்ந்து நல்ல நல்ல வாய்ப்புகள் அமைந்தன என்றவரிடம்…

 

தொடர்ந்து சாமியார் வேடம் சலிக்கலையா ?

இல்லை சிவா இயல்பாகவே எனக்கு ஆன்மீக ஈடுபாடு சிவபித்து அதிகம் அப்பன் இட்ட கட்டளையாகவே இதை கருதி செய்கிறேன் என தெளிவுபடுத்தினார்.

நல்ல கேரக்டர் பெரிய ஆர்டிஸ்ட் இப்படி எது வந்தாலும் தனது தாடிக்கு பிரச்சனை வந்தால் நோ சொல்லிவிடுவார் என கேள்விப்பட்டதை கேட்டோம்

அது ஒன்றும் இல்லைங்க எனக்கு என்னைய ரொம்ப பிடிக்கும் அதுக்கு மேலே என்னோட தாடி பிடிக்கும் எந்த சூழலிலும் இதை இழக்க தயாராய் இல்லை கலயாணத் திலேயே லைட்டா தாடி வச்சிருந்தேன்னா பார்த்துக்கோங்க என ஜாலியாக சொன்னவரிடம்.

சாமி புதுசா வாய்ப்பு தேடி வர்றவங்களுக்கு உங்க அருளாசி என்ன ?

குடும்பம் ரொம்ப முக்கியங்க தொடர்ந்து முயற்சி பண்ணியும் வாய்ப்பு சரியா அமையவில்லை என்றால் உங்க குடும்பத்த காப்பாற்ற வேறு வழியை தேடி போறது நல்லது. என முடித்துக்கொண்டார். சுப்ரமணியபுரம் சீரியலின் கம்பு சித்தர்.

செய்தி : எம்.எஸ் மதுக்குமார்

About ThagavalAdmin@123

Check Also

நோயற்ற வாழ்வு…..!! – வயிற்றுப்புண்ணிற்கு வகை வகையான மருத்துவம்.

நோயற்ற வாழ்வு…!! தொடர். தகவல்பலகை.காம் இணைய வாசகர்களுக்கு பணிவான வணக்கம் நமது இணையத்தில் பாரம்பரிய மருத்துவ குறிப்புகளை எழுத வெற்றிலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *