டீ கடை தீ அரசு மருத்துவமனை கட்டிடத்திலும் பரவியது.தீயணைப்பு துறையினர் துரிதத்தால் அணைக்கப்பட்டது
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் அருகே திருமணி செல்லும் சாலையில் செல்லமுத்து என்பவரின் மனைவி லதா என்பவர் பெட்டிகடை மற்றும் டீ கடை நடத்தி வருகிறார். கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு இரவு 11.00 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த மூன்று சிலிண்டரில் ஒன்று வெடித்து உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் மேல்தளத்தில் விழுந்ததில் உபயோகமற்ற பழைய படுக்கைகள் தீபற்றி எரியத்தொடங்கியது. தீ மளமளவென பரவ .சம்பவம் பற்றி அறிந்த செங்கல்பட்டு தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் கடுமையாக போராடி டீ கடை மற்றும் மருத்துவமனை மேல்தளத்தில் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மருத்துவ மனை கட்டிடத்தில் தீயை பார்த்த நோயாளிகள் அலறியடித்து மருத்துவமனையிலிருந்து வெளியே ஓடிவந்தனர். இவ்விபத்து காரணமாக செங்கல்பட்டு அரசு பொதுமருத்தவமனை பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நகர போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.