mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / தங்கபாலுன்னு சொன்னா புரியலை இயற்கை அங்காடி

தங்கபாலுன்னு சொன்னா புரியலை இயற்கை அங்காடி

தங்கபாலுன்னு சொன்னா புரியலை இயற்கை அங்காடி தங்கபாலுன்னா அனைவரும் அறிந்துள்ளார்கள் 28 வயதுடைய அந்த இளைஞனை.

அரியலூர் மாவட்டம் செந்துறை கடைவீதியில் உள்ள பிரதான சாலையில் சிறியதாய் உள்ளது இயற்கை அங்காடி. முடக்கத்தான் தோசை ,கேழ்வரகு குழிப்பணியாரம், கற்றாலை ஜூஸ், கம்பு தோசை, கீரை சூப், சத்துமாவு கஞ்சி, தேத்தான்கொட்டை டீ என விதவிதமாய் ஆரோக்கியமான ரசாயன கலப்படமற்ற பொருளில் உணவு தயாரித்து குறுகிய காலத்தில் தனக்கென ஒரு உணவருத்துவோர் வட்டாரத்தை உருவாக்கியுள்ளவர்.

அன்றாடம் காலை 4 மணிக்கெல்லாம் துவங்கும் தங்கபாலுவின் இயற்கை உணவு தயாரிக்கும் பணி வெளியூர் வேலை பார்ப்போர், நடைபயிற்சி மேற்கொள்வோர், புதிய வெரைட்டி தேடும் உணவு பிரியர்கள் என 6 மணிமுதல் களைகட்டும் காலை உணவு 9.30 தோடு முடிந்து விடுகிறது அதன் பிறகு மாலை சுண்டல், குழுபணியாரம் ,ஆப்பம் என வியாபாரம் இடைப்பட்ட நேரத்தில் சத்துமாவு கஞ்சி, மற்றும் மூலிகை டீ வகைகள் கிடைக்கின்றன.

தங்கபாலு எப்படி உணவகம் ஜடியா வந்தது?

நான் பதினேழு வயசிலேயே சென்னையில் ஹோட்டல் வேலைக்கு போனேன் அங்க பிரபலமான கடையில் வேலை கிடைத்தது பத்து வருஷம் இருந்தேன் அப்புறம் சொந்த ஊருக்கு வர சொல்லி சொன்னாங்க இங்க வந்து என்ன பண்றதுன்னு யோசிச்சப்ப டவுன்ல பிரண்டை, முடக்கத்தான், பசலை, ஆவரை என கிராமத்துல ஈஸியா கிடைக்கிறதை கொண்டு வந்து விற்பதை பார்ப்பேன். அப்ப மனிதனுக்கு தேவை ஆரோக்கிய உணவுன்னு மனசுல பட்டுது அதனால் இயற்கை அங்காடி ஆரம்பித்தேன் முதலில் கொஞ்சம் சுணக்கமா இருந்தது இப்போ எல்லாருமே ஆதரிக்கிறாங்க என சொல்லும் தங்கபாலுக்கு மரங்கள்னா கொள்ளை பிரியம் அது எந்த அளவுக்குன்னா அவரே சொல்றாரு பாருங்க….

மரங்கள் நடுறவங்க அதை தொடர்ந்து கண்காணிக்க முயல்வதில்லை என்ற ஆதங்கம் மனசுல வெகு நாள் இருந்தது.
நட்டு வச்சிட்டு போயிடுவாங்க அதை ஆடு மாடு கடிச்சி வீணாக்கிவிடும். என்னோட தலை தீபாவளி அன்னைக்கி நாலு மணிக்கெல்லாம் எண்ணெய் தேய்ச்சி குளிச்சிட்டு முதல் வேலையா வீடு வீடா போயி அம்மா….நாளும் கெழமையிலே ஒரு நல்லது பண்ணுங்க உங்க வீட்டில் பழைய புடவை இருந்தா கொடுங்கன்னு குரல் கொடுத்தேன். என்னை பார்த்ததும் தலை தீபாவளி கொண்டாடுற புது மாப்பிள்ளை இப்படி இருக்கானேன்னு நிறைய பேரு அதிர்ச்சி ஆனாலும் சுதாரிச்சிகிட்டு புடவைங்க கொடுத்தாங்க அதை எடுகிட்டு போயி ரோட்டில் உள்ள மரங்களுக்கு சுத்தி விட்டு பாதுகாப்பு பண்ணிட்டுதான் வீட்டுக்கு வந்து சாமி கும்பிட்டேன் என்கிறார் சிரித்துக்கொண்டே…

வணிகம் ஒன்றே நோக்கம் என்று ஓடும் உலகில் வாழும் வாழ்க்கையும் அதில் ஆரோக்கியமும் முக்கியம் என உணவின் மூலம் உணர்ந்தும் தங்கபாலு போன்ற இளைஞர்கள் இன்று தமிழகம் முழுவதும் தலையெடுக்க துவங்கியுள்ளார்கள் என்பது இயற்கை வேளாண்மைக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல எதிர்கால சந்ததிகளுக்கும் கிடைத்த வெற்றி.

செய்தி: எம்.எஸ்.மதுக்குமார்

About ThagavalAdmin@123

Check Also

சிறுகதை

சிறு கதையை காண இங்கே கிளிக் செய்யவும் Share on: WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *