தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம்
அரியலூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் சுரேஷ் தலைமை ஏற்க மாநில துணை தலைவர் பொய்யாமொழி, மத்திய மண்டல செயலாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட சையலாளர் தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்
மாநில பொதுச் செயலாளர் மோகனரங்கன் சங்க செயலறிக்கையையும், மாநில பொருளாளர் அழகிரிசாமி சங்க நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர். முன்னாள் மாநில தலைவர் துரை ராசமாணிக்கம் வழிகாட்டுதல் உரையாற்றினார். மாநில அமைப்பு செயலாளர் அழகர்சாமி, மாநில துணைத் தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.
கூட்டத்தில், இணையதள சேவை இ.அடங்கல் குறைபாடுகளை களைய தொழில்நுட்ப குழு ஆலோசனைகளை பெற்று அரசுக்கு அளித்து தீர்வு காணுவது. மாவட்ட பணிமாறுதல், பணிவரன் முறை ஆகியவற்றுக்கு அரசு ஆணைகளை மூன்று மாதத்திற்குள் வழங்க அரசை வலியுறுத்துவது, தமிழ்நாடு அரசு சிக்கனம் மற்றும் நிர்வாக சீரமைப்புக்கு ஆதிசேஷய்யா கமிட்டிக்கு அளிக்க வேண்டிய அறிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்ட முடிவில் பொருளாளர் நந்தகுமார் நன்றி தெரிவித்தார்.
Thank you for your shening. I am worried that I lack creative ideas. It is your enticle that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.com/en/register?ref=P9L9FQKY