தளவாய் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு துவக்கவிழாவில் குன்னம் எம்எல்ஏ மற்றும் சிதம்பரம் எம்பி பங்கேற்ப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்காவில் அமைந்துள்ள தளவாய் கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு உயர்நிளைபள்ளியை மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்தவேண்டுமென சுற்றுவட்டார மக்கள் நீண்டகால கோரிக்கையாக வைத்திருந்தனர் பள்ளி மற்றும் கல்வித்துறை இந்த கோரிக்கையை ஏற்று தளவாய் அரசு பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக அறிவித்துள்ளது இதன் துவக்கவிழாவில் குன்னம் சட்டமன்ற உறுப்பினரும் பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளருமான ஆர்டி ராமசந்திரன் சிதம்பரம் நாடளமன்ற உறுப்பினர் மா சந்திரகாசி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர் கல்விதுறை அலுவலர்கள் புகழேந்தி வெற்றி செல்வி அதிமுக பிரமுகர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்