தா பழூரில் மகா காளி பொன்னூஞ் சல் சேவை சிறப்பாக நடைபெற்றது
.அரியலூர் மாவட்டம் தா.பழூர் தெற்குத்தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் மற்றும் பெரியநாயகி கோயில் அருகில் இதற்கென பிரத்யோகமாக அமைக்கப்பட்ட பொன்னூஞ்சல் பலகையில் அம்மன் வந்து அமர்ந்து இளைப்பாறினார். அப்போது அம்மனுக்கு இதம் தரும் வகையில் பொன்னூசல், அம்மன் தாலாட்டு பாடல்களை சிவனடியார்கள் பாடி அம்மனை மகிழ்வித்தனர்.
இதைத்தொடர்ந்து அம்மனின் பாம்பாட்ட நடனம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. அப்போது பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி என கைதட்டி ஆரவாவாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியை காண தா.ழூர், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்தனர்.
அசாம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தா.பழூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தா.பழூரில் கடந்த 10 நாள்களாக நடைப்பெற்று வரும் மகா காளியம்மன் திருநடன விழா செல்லியம்மன் கோயிலை அம்மன் சென்றடைந்துடன் விழா நிறைவு பெற்றது. பின்னர் அம்மன் சரசம் காளியம்மன் கோயிலுக்கு வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம நாட்டாண்மைகள், திருப்பணிக்குழுவினர் செய்து இருந்தனர்.