mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / திமுக பிரமுகர் வாய்க்கால் தகராறில் பலி

திமுக பிரமுகர் வாய்க்கால் தகராறில் பலி

திமுக பிரமுகர் வாய்க்கால் தகராறில் பலி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள சேத்தமங்கலத்தை சேர்ந்த திமுக பிரமுகர் தர்மலிங்கம் வயது 62 இவர் நேற்று மதியம் தனது வயலுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது பக்கத்து வயல் உரிமையாளரும், தர்மலிங்கத்தின் உறவினருமான பழனிவேல் வயது 40 என்பவர் தண்ணீர் பாய்ச்சிவது சம்பந்தமாக தகராறு செய்துள்ளார்.

அது முற்றி கைகலப்பு ஏற்பட்டபோது தர்மலிங்கத்தை பழனிவேல் பிடித்து தள்ளி விட்டதால் அருகே இருந்த மரத்தில் மோதி தர்மலிங்கம் மயக்கமடைந்தார். அருகே இருந்த உறவினர்கள் அவரை பெண்ணாடம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறவும்.

மீண்டும் ஊருக்கே இறந்தவரின் உடலை கொண்டுவந்த போது தகவல் அறிந்த தளவாய் காவல்துறையினர் உதவி ஆய்வாளர் சரத்குமார் தலைமையில் தர்மலிங்கத்தின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு தலைமறைவான குற்ற வாளி பழனிவேலுவை தேடி வருகின்றனர்.

About ThagavalAdmin@123

Check Also

அரசுப்பள்ளியை ஊக்குவிக்கும் தொழிலதிபர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கீழராயம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி இவர் சுத்திகரிப்பு குடிநீர் , மற்றும் புகையில்லா இருசக்ரவாகன …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *