திருமழபாடி மாசிமகத் தேரோட்டம்
திருமழபாடி சுந்தராம்பிகை உடனுறைய வைத்தியநாதசுவாமி கோயிலில் மாசிமகத் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே திருமழபாடியில் திருமாள் இந்திரன் ஆகியோரால் வழிப்பட பெற்றதும், ஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர்,ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் திருப்பதிகங்கள் பாடி வழிப்பட்ட வரலாற்று புகழ்பெற்ற சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகப்பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான விழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் எழுந்திருளல் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி, நேற்று காலை இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் பெரியத்தேரை வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் ஊரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து மாலை நிலையை அடைந்தது. ஆய்வாளர் சட்டநாதன், செயல்அலுவலர் அனிதா, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்ட.நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கீழப்பழூர் போலீசார் செய்திருந்தனர்