தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் ஆர்.கே.நகர் வந்தது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல்தேதி டிசம்பர் 21 என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து. தேர்தல் ஆணையத்தின் சட்டவிதிமுறைகள் நடமுறைக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் இன்று அதிகாலை முதல் வாகன சோதனைகள் தொடங்கினர்.
இந்த சோதனையில் பணம் மற்றும் ஆயுதங்கள் தொகுதிக்குள் வருவது தடுக்கப்படுவதோடு. வெளியாட்கள் நடமாட்டத்தையும் கண்காணிக்க உதவும் என காவல்துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களின் வாகனங்கள் அடையாளம் காணும் பணியும் நடைபெறும் என தெரிகிறது.