தொடரும் சோகம் நீட் பாதிப்பால் திருச்சி மாணவி பலி
நீட் தேர்வு முறையால் பெரிதும் பாதிப்பு ஏற்படுவதாகவும் இதனால் தமிழக மாணவ மாணவிக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர்
இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பிரதீபா நீட் பாதிப்பால் எலி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார் இந்த சோகம் அடங்குவதற்குள்
திருச்சி உத்தமர்கோவில் கண்ணன் என்பவரின் மகளதொழிற்சங்க மருத்துவ கனவோடு நீட் தேர்வு எழுதி இருத்தார் அதில் குறவந்த மதிப்பெண் கிடைத்ததால் மிகுந்த மன உளைச்சலோடு காணப்பட்டுள்ளார்
இந்நிலையில் நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் மின்விசிறியில் துப்பட்டாவை வைத்து மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்
வெளியில் சென்றவர்கள் வந்துபார்த்த போது சுபஸ்ரீ மின்விசிறியில் தொங்குவதை கண்டு அலற அக்கம்பக்கத்தினர் உதவியோடு மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார்
தமிழகத்தில் நீட்பாதிப்பால் தற்கொலை நிகழ்வு தொடருவது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இறந்த மாணவின் தந்தை போக்குவரத்து துறையில் பணியாற்றுவதோடு அண்ணா தொழிற்சங்க திருச்சிகிளை தலைவராகவும் உள்ளார்.