நாட்டு நலப் பணித்திட்டம் அரியலூர் அரசு கலைக் கல்லூரி அலகு-1 தூய்மைப் பணி மேற்கொண்டது
அரியலூர் அருகேயுள்ள வாலாஜா நகரத்தில், அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு-1 சார்பில் தூய்மைப் பாரத இயக்கம் குறித்த கோடைக்கால பயிற்சி முகாம் கடந்த 25 -ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
4-ம் நாள் வாலாஜாநகரம் கிராமத்திலுள்ள ஏரி மற்றும் அதனைச்சுற்றியுள்ள முள் செடி, பார்த்தீனியச் செடிகள், கொடிகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். இந்த தூய்மைப் பணியை கல்லூரி முதல்வர் பி.பழனிச்சாமி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் வெ.கருணாகரன் சிறப்பாக செய்திருந்தார்