mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / நோயற்ற வாழ்வு…..!! – வயிற்றுப்புண்ணிற்கு வகை வகையான மருத்துவம்.

நோயற்ற வாழ்வு…..!! – வயிற்றுப்புண்ணிற்கு வகை வகையான மருத்துவம்.

நோயற்ற வாழ்வு…!!

தொடர்.

தகவல்பலகை.காம் இணைய வாசகர்களுக்கு பணிவான வணக்கம் நமது இணையத்தில் பாரம்பரிய மருத்துவ குறிப்புகளை எழுத வெற்றிலை வைத்தியர் என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் திட்டக்குடி தாலுக்கா பெரிங்கியம் கிராமத்தை சேர்ந்த பாரம்பரிய மருத்துவர் திரு. சி.வரதராசன் இசைந்துள்ளார்கள். படித்து பயன்பெறுவோம். நன்றி

எம்.எஸ்.மதுக்குமார்
ஆசிரியர்
தகவல்பலகை.காம்
இணையம்

அன்பு வாசகர்களுக்கு வணக்கம் நான் பாரம்பரிய மருத்துவர் சி.வரதராசன் பேசுகிறேன். நமது முன்னோர்கள் சொன்ன எனது அனுபவத்தில் கண்ட பலன்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. சிறு சிறு நோய்களை நாமே சரிசெய்துகொள்வதை கிராமத்தில் கை வைத்தியம் என்பார்கள் அல்லவா… அப்படியான சில வகை விஷயங்களை இப்போது பார்ப்போம்.


நோயற்ற வாழ்வு…..!!

தொடர். 1

வயிற்றுப்புண்ணிற்கு வகை வகையான மருத்துவம்.

இதனை குன்ம நோய் எனக் கூறுவார்கள், வயிறு, தோள்பட்டை, மற்றும் தொடை பகுதிகளில் இதன் தாக்கம் இருக்கும் பரவலாக வலிக்கும்.

வயிற்று புண்ணுக்கான அறிகுறியாக…

வயிற்றில் எரிச்சல் , வயிறு உப்பிசம் , உணவு ஜீரணமாக அதிக நேரம் பிடித்தல், பசி நேரத்தில் பசி அதிகமாகுதல், சாப்பிட்ட பின் வயிறு உப்பிக்கொள்ளுதல், மற்றும் வாயுத்தொல்லை தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பது போன்றவையாகும்.

புண் அதிகமாகும்போது:

சாப்பிட்டவுடன் வாந்தி வரும் பேசினால் வயிறு எரியும் தொண்டையில் கடுமையான வலி உண்டாகும் நாக்கு வறட்சியாக இருக்கும். இரவில் தூக்கம் இல்லாமை உணவு உண்டபின் களைப்படைந்து போகுதல் உணவு உண்டவுடன் வயிற்றில் கடுமையானவலி வாந்தியில் இரத்தம் கலந்துவருதல் மலத்தில் இரத்தம் கலந்துவருவது உடல் நடுங்குதல் , உடல் பலவீனம் அடைந்து போதல் என மேற்கூறிய”குணங்களில்”ஒவ்வொருவருக்கும் அவரது உடல்நிலைக்கேற்ப ஏதாவது ஒரு அறிகுறி தென்படும்.

காரணங்கள்:-
இந்நோய் பெரும்பாலும் பித்த உடலினருக்கே அதிகம் வருகிறது. நீண்ட நாள்பட்ட மலச்சிக்கலாலும் வாயு மிகுதியாவதாலும் வருகிறது. எளிதில் சீரணம் ஆகாத உணவை உண்பதால் வருகிறது. அடிக்கடி உண்பது சரியான நேரத்தில் உண்ணாதது போன்ற காரணங்களால் வருகிறது.

சாதாரண வாயுத்தொல்லை வயிறு உப்பிசம், அசீரணம் போன்றக் காரணங்களைக் கொண்டு அது வயிற்றுப் புண் என்று தீர்மானித்து விடக்கூடாது.

குன்ம நோய் எட்டு வகைப்படும் அதற்கான தீர்வுகளை பார்ப்போம்

மருந்து :

1 வெள்ளாட்டுப்பால் காலையில் ஐந்து மணிக்குள் பீச்சி சிறிது தேன் கலந்து பச்சைப் பாலாகவே குடிக்க வேண்டும். இதனால் கொடிய வயிற்றுப் புண்ணும் ஆறிவிடும். வயிற்றுப் புண்ணால் ஏற்ப்பட்ட பலவீனமும் தீரும்.

2.வேலிக்காட்டாமணக்கு செடியின் குச்சியின் நுனி பகுதி மூன்றினை ஒடித்து இலைகளை எடுத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் மென்று அதன்பாலைக் விழுங்க வேண்டும். வாந்தி வருவது போல் இருந்தால் தவிர்த்து விடவும்.

3. புதிய கறிவேப்பிலையை நன்றாகப் பட்டுப்போல அரைத்து புளிக்காத மோர் அல்லது காய்ச்சி ஆறிய பசும் பால் கலந்து குடிக்க வேண்டும். இம்முறையை ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தவும்.

4. மாதுளம் பிஞ்சு அரைத்த சாறு 10 மில்லி காலை உணவிற்கு அரை மணிக்கு முன் வாரம் இரண்டு அல்லது மூன்று முறைக் குடிக்கவும் வயிற்று எரிச்சல் இருக்கும் போது இது நல்ல பலன் தரும்.

5. முதல் நாள் இரவு முட்டைக்கோசு இரண்டு கைப்பிடி அளவு, தூளாக நறுக்கி அதனுடன் சிறிது மல்லி, சீரகம் சேர்த்து ஒன்றரை லிட்டர நீர் ஊற்றி நான்கில் ஒரு பங்கு வரும் வரை சுண்டக் காய்ச்சி காலையில் வறும் வயிற்றில் 75 மில்லி குடிக்கவும். வாத உடலினர் இம் முறையை பயன் படுத்த கூடாது. உடல் அதிக குளிர்ச்சியாகிவிடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

6. வயிற்றுப்புண்ணால் வாய்வு பிரியாது அவதிப்படுவோர் எட்டு சின்ன வெங்காயத்தை வதக்கி சாப்பிட குணமாகும்,(அல்லது) வெற்றிலையில் சிறிது சுண்ணாம்பு தடவி மென்று அந்த சாற்றை முழுங்க வாயுத்தொல்லையும் மலச்சிக்கலும் தீரும். உணவிற்கு இடையில் உலர்திராட்சை அடிக்கடி சாப்பிட்டுவர வயிற்று எரிச்சலும் பலவீனமும் நீங்கும்.

உணவு முறை : ஆவியில் வெந்த இட்லி , இடியாப்பம் மற்றும் அரிசி கஞ்சி உணவுகள்.

தவிர்க வேண்டிய உணவுகள்:

மைதா, அசைவம், எண்ணைப்பண்டங்கள் மேலும் எளிதில் சீரணம் ஆகாத உணவுகள் தவிர்த்தல் நலம் மீண்டும் வேறு தகவலோடு சந்திப்போம் நன்றி.

பாரம்பரிய மருத்துவர்
சி.வரதராசன்

About ThagavalAdmin@123

Check Also

சிறுகதை

சிறு கதையை காண இங்கே கிளிக் செய்யவும் Share on: WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *