பதினான்காம் நூற்றாண்டு ஓவியம் கண் முன்னே நிறுத்தி அசத்திய ஆசிரியர்.
உலக புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவரான லியார்ன்டோ டாவின்சி கி பி 1498 காலகட்டத்தில் வரைந்த
ஏசு கிறிஸ்துவின் கடைசி விருந்து (The last supper) என்ற ரோம்நகரம் சிஸ்டைன் சர்ச் ஓவியம் கிருஸ்துவ மக்களிடையே மிகவும் பிரபலம்.
அரியலூர் மாவட்டம் சிலால் கிராமத்தை சேர்ந்த அன்புசித்திரன் என்ற அன்பழகனிடம் அவரது சென்னை நண்பர் ஒருவர் இந்த புகழ் பெற்ற ஓவியத்தை தனக்காக வரைந்து தரமுடியுமா ? என கேட்டுக்கொண்டதற்கு இணங்க
அன்புசித்திரன் நாலுக்கு ஏழு என்ற அளவில் எண்ணெய் வண்ண பிரதி ஓவியமாக (oil on canvas painting) வரைய தொடங்கினார். இத்தகவலை கேள்விப்பட்டு அவரது இல்லம் வந்த முன்னாள் ஓவிய ஆசிரியர் முத்துகுமரன் , மணப்பத்தூர் பள்ளி தலைமையாசிரியர் தங்க.சிவமூர்த்தி மற்றும் ஆசிரியர் இராவணன் ஆகியோர்
மிக தத்ரூபமாக வந்துள்ள இவ்வோவியம் கண்டு மகிழ்ச்சியும் திகைப்பும் அடைந்ததோடு அன்புசித்திரனை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்கள் அத்தோடு பெரியாரின் சிந்தனைகள் என்ற புத்தகமும் வழங்கினர். இவ்வோவியம் வரைந்த அன்புசித்திரன் ஓவியகலை பிரிவில் மத்திய அரசு பள்ளியில் பணிபுரிந்தவர் , கவிஞர் , சிறுகதை எழுத்தாளர் என்பதும் குறிப்பிடதக்கது.