mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Uncategorized / பனைக்கு வந்த வினை

பனைக்கு வந்த வினை

இன்றளவும் கருத்துகணிப்பு வைத்து பிடித்த தலைவர்யார்? என்றால் எம் ஜி ஆர் என யோசிக்காமலே பெரும்பான்மையோர் கூறும் அந்த மக்கள் திலகத்தின் நூற்றாண்டு கொண்டாடும் வேளையில்
அரியலூர் மாவட்டம் செந்துறையின் ஒருபகுதியான உடையான்குடிகாடு கேட் அருகிலிருந்து சொக்கநாதபுரம் வரும் செல்லும் சாலை செந்துறை நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் வருகிறது. தற்போது புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெறும் வேலை துவக்கியுள்ள நிலையில்

1980 காலகட்டத்தில் எம்ஜிஆர் ஆட்சியின் போது சாலையோர மரம்வளர்ப்பு திட்டத்தின் பனைமரங்கள் விதைக்கபட்டு பராமரித்ததில் தற்போது ஜந்நூறுக்கும் மேற்பட்ட பனை மரங்கள் செழித்து வளர்ந்து நிழல் பரப்பியுள்ளன.புதிய சாலை பணியில் பக்கவாட்டு மண் அணைப்பிற்காக பனை மரங்கள் பலவற்றை வேரோடு சாய்த்துள்ளனர்.

இதுகுறித்து கவலையடைந்துள்ள இயற்க்கை ஆர்வலர்கள் சாலை மனிதர்களுக்கு அவசியம் தான் அதே வேளை மரங்களும் முக்கியம்தானே. சாலை பணியின் போது மரங்களை அகற்றாமலே புதிய சாலை பணி மேற்க்கொள்ளலாம் உதாரணமாக திருச்சி புதுக்கோட்டை சாலை விரிவாக்கத்தின் போது ஒரங்களில் இருந்த புளியமரங்களை வேரோடு அகற்றி வேறு இடங்களில் நட்டுள்ளார்கள். அது போல் மெனக்கேடா விட்டாலும் பனைமரங்களை சாய்க்காமல் இருந்தாலே போதும் என்கிறார்கள். தூக்கணாங்குருகூடுகள் நிறைந்த சாலைகளில் இதுவும் ஒன்று. என்ற பெருமிதம் இழந்து மிஞ்சி இருக்கும் இந்த பனைமரங்களையாவது விட்டுவையுங்கள் என்கிறார்கள். கவலையோடு.

பொன்மனச்செம்மல் என கர்ணனுக்கு ஒப்பாக கருதப்படும் எம்ஜிஆர் நூற்றாண்டு கொண்டாடும் காலத்தில் அவர் கொடுத்த கொடையான பனையை புறக்கணிப்பது எந்த வித நியாயம் ?

About ThagavalAdmin@123

Check Also

அரசுப்பள்ளியை ஊக்குவிக்கும் தொழிலதிபர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கீழராயம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி இவர் சுத்திகரிப்பு குடிநீர் , மற்றும் புகையில்லா இருசக்ரவாகன …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *