mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / பனை இருக்க பயமேன் (தொடர்….2 )

பனை இருக்க பயமேன் (தொடர்….2 )

பனை இருக்க பயமேன் (தொடர்….2 )

பனையின் தாவரவியியல் பெயர் போர்ஸ்சா பீளாபெல்லிபர் borassas flabellifer ஆகும்.
நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்புவரை ஏறக்குறைய 800 க்கு மேற்ப்பட்ட பனைப்பயன்பாட்டு பொருட்களை தமிழர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பனையின் தும்பு ஈக்கு விறகு ஓலை நார் என தன் உடல் முழுவதையும் மனிதர்களுக்கு அள்ளித்தருகிறது.

பனையின் பயன்கள் அதன் மருத்துவ குணங்கள் அதிகம்..அது தன் வாழ்நாளில் முதல் வருடத்தில் இருந்தே பலனை தர ஆரம்பித்து விடும்..பனை மரம் ஒரு பல்லுயிர் பெருக்கி ஆகும் எப்படியேன்றால் தன் உடல் அமைப்பினில் அனைத்து உயிரினமும் வாழ வழி செய்கிறது பூச்சி ஈ எறும்பு பல்லி ஓணான் அரனை கிளி காகம் குருவி பூரான் என எல்லாம் வாழ்கின்றது….இது மட்டுமல்லாமல் மனிதன் தன் தேவைகளையும் இதனை பயன்படுத்தி பூர்த்திச் செய்துக்கொள்கிறேன்.பனையில் 34 வகைகள் உண்டு அவைகள் முறையே ஆண்பனை ,பெண்பனை ,கூந்தப்பனை , தாளிப்பனை, குமுதிபனை, சாற்றுபனை , ஈச்சம்பனை , ஈழம்பனை ,சீமைபனை, ஆதம்பனை , திப்பிலிபனை ,உடலாற்பனை ,கிச்சிலிபனை , குடைபனை , இளம்பனை ,கூரைபனை, இடுக்குபனை , தாதம்பனை ,காந்தம்பனை , பாக்குபனை ,ஈரம்பனை ,சீனபனை ,குண்டுபனை ,ஆலாம்பனை , கொண்டைபனை ,ஏரிலைபனை ,ஏசறுபனை ,காட்டுபனை, கதளிபனை , வலியபனை, வாதபனை ,அழகுபனை ,நிலபனை ,சனம்பனை ஆகியவை ஆகும்.

பனைமரம் வளர்ப்பு:

பனைமரம் அது தை மாதம் தன் குலையை தள்ளுகிறது அது மெல்ல மெல்ல வளர்ந்து சித்திரையில் நுங்காக வளர்ச்சி அடைகிறது ..இது மெல்ல இரண்டு மாதங்கள் வளர்ந்து பழமாக மாறி கீழே விழ ஆரம்பிக்கும் அதனை சேகரித்து நாம் விதைகளாக பயன்படுத்தலாம்… இயற்கையாகவே அது மழை காலங்களில் கீழே விழும் அதனை சேகரித்து நாம் விதைக்கலாம்…. விதைக்கும் முறை மற்றும் விதைக்கும் காலநிலைகள் இவற்றை அடுத்த தொடரில் தருகிறேன்….

அகரம் இள. ஆனந்த்

 

About ThagavalAdmin@123

Check Also

நோயற்ற வாழ்வு…..!! – வயிற்றுப்புண்ணிற்கு வகை வகையான மருத்துவம்.

நோயற்ற வாழ்வு…!! தொடர். தகவல்பலகை.காம் இணைய வாசகர்களுக்கு பணிவான வணக்கம் நமது இணையத்தில் பாரம்பரிய மருத்துவ குறிப்புகளை எழுத வெற்றிலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *