mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / பனை இருக்க பயமேன்… தொடர் 3

பனை இருக்க பயமேன்… தொடர் 3

பனை இருக்க பயமேன்…

தொடர் 3

வணக்கங்க போன தொடரில் பனை வகைகளை பார்த்தோம் இல்லிங்களா… இப்போ அதன் பருவநிலை எப்படின்னு பார்ப்போம் பனை காய்கள் மார்ச் மாதங்களில் காய்க்க தொடங்கும் மே மாதங்களில் அது நுங்காக மாறி நம்மை கோடையில் தாகத்தில் இருந்து காக்கிறது கிராமங்களில் கோடை விடுமுறையில் சிறுவர்களின் உணவே இதுதான் இது கோடையில் ஏற்படும் வெப்பத்தை தணிக்கும்…நுங்கை சாப்பிட்ட பிறகு அதன் கொடுக்கையில் வண்டி செய்து சிறுவர்கள் விளையாடுவர்கள்.. அதனை துண்டாக நறுக்கி கால்நடைகளுக்கு உணவாகவும் தருவார்கள்…நுங்கு கோடைக்கு நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய சிறந்த உணவு.

பனையில் பெண் மரம்தான் நுங்கு தருகிறது…ஆண் மரமோ இனவிருத்தி செய்ய அதனுடைய பூக்களை தூவுகிறது மற்றும் ஆண் மரத்தில் பதநீர் எடுக்கலாம்.. பொதுவாக பனை தொழிலாளர்கள் ஐனவரி முதலில் ஆண் மரங்கள் பூ பூக்கும் தருவாயில் பாலையை சீவி பதநீர் சேகரிக்க ஆரம்பித்து விடுவார்கள்…அதன் பிறகு படிபடியாக பெண் மரத்தில் இருந்து பதநீர் இறக்குவார்கள்… ஆண் மரங்களிலே முதலில் பதநீர் இறக்க ஆரம்பிப்பார்கள்… இதனுடைய பாலையில் பதநீர் காலம் ஆறு மாதங்களோடு முடிந்துவிடும்…அதன் பிறகு அந்த மரத்தினை சுத்தம் செய்து விட்டுவிடுவார்கள்….பெண் மரங்கள் கோடை முடிவில் அதன் காய்ப்பை நிறுத்திவிடும்..அதன் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பனை காய்கள் பழுக்க தொடங்கிவிடும்.

பனை விதை சேகரிப்பு மற்றும் நடவு முறை பற்றி சொல்லவேண்டுமானால்

பனை பழங்கள் ஆகஸ்ட் இருந்து மெல்ல மெல்ல பழுத்து விழ தொடங்கி நவம்பர் வரை பழங்கள் கிடைக்கும். பனபழங்கள் விழுந்தவுடன் அதனை சேகரித்து ஒரு நிழலான இடத்துல் வைக்கவும் அதனை அதிக பட்சமாக 30 நாட்களுக்குள் விதைக்க வேண்டும் அப்போது தான் அதனுடைய வளர்ச்சி சரியாக இருக்கும்.. பனபழங்களில் ஒரு விதை இரண்டு ,மூன்று மற்றும் நான்கு விதைகள் என உண்டு இவைகளை தனித்தனியாக பிரித்து ஒரு சில மணி நேரம் உலர்த்தி பின்பு விதைக்கலாம்.


இதனில் விதையை வைத்து ஆண் பெண் என ஆராய்ச்சி ரீதியாக காணவில்லை ஆனால் பட்டறிவளார்கள் இதனை இனம் கண்டதில் அனுபவ ரீதியாக ஒரு விதை இருப்பவை பெண்ணாகவும் இரண்டு விதை உள்ளதில் ஓன்று ஆண் மற்றொன்று பெண் எனவும் மூன்று விதை உள்ளதில் இரண்டு ஆண் ஓன்று பெண் எனவும் அவரவர் அனுபவத்தில் சொல்கின்றனர்.
ஆனால் இரண்டு மரங்களும் பலன் தரகூடியவைகளே.
விதைக்கும் போது ஒரு விதைக்கும் மற்றொரு விதைக்கும் குறைந்தபட்ச இடைவெளி 5 அடியாகவும் அதிகபட்சம் 10 இருந்தால் நல்லது. ஒரு பனை மரத்தில் இருந்து குறைந்தபட்சம் 200 முதல் அதிகபட்சம் 500 விதைகள் வரை கிடைக்கும்…இது ஓர் ஆண்டிற்கு ஆன கணக்கு …
அடுத்த தொடரில் பனையின் மதிப்புகூட்டு பொருட்கள் மற்றும் மருத்துவ குணம் பற்றி அடித்த தொடரில் பார்ப்போம்… !!

அகரம் இள. ஆனந்த்

About ThagavalAdmin@123

Check Also

சமையல் ஈஸி : தேங்காய்பால் ரசம்

தேவையான பொருட்கள் 1மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் 2 மிளகு 1டீஸ்பூன் 3 சீரகம். 1 1/2 டீஸ்பூன் 4 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *