mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / பனை இருக்க பயமேன்….! புரியாததை புரிந்து கொள்ளும் புதிய தொடர்.

பனை இருக்க பயமேன்….! புரியாததை புரிந்து கொள்ளும் புதிய தொடர்.

பனை இருக்க பயமேன்….! புரியாததை புரிந்து கொள்ளும் புதிய தொடர்.

தகவல்பலகை வாசகர் வட்டத்திற்கு வணக்கம் நமது மின்னிதழ் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஆம் தொடர் ஒன்று உருவாகிறது பொறியாளர் ஆனந்த் அவர்கள் வேலையை விட்டு விவசாயம் பக்கம் திரும்பியதைப்போல உங்க இணையத்தில் ஏன் ? தொடர்கள் வருவதில்லை என கேட்டார். கேள்வி ஆழமாய் இருந்ததால் அதை கிடப்பில் போடாமல் செயலில் இறங்கிவிட்டோம் ஆனந்த் தொடர் எழுத சம்மதித்தார் எப்போதும் ஆதரிக்கும் நீங்கள் இப்போதும் ஆதரிப்பீர்கள் நன்றி.

ஆசிரியர்
எம்.எஸ்.மதுக்குமார்.

இனி பனை இருக்க பயமேன்.

( 1 )பனைமரம் தமிழனின் அடையாளம் மட்டுமல்ல ஆவணமும் கூட ..பனைமரம் மனிதனோடு ஒன்றியது வெப்பமண்டல பகுதியில் வளர்வதால் அந்த மண்ணில் உள்ள மனிதர்களை போலவே அதுவும் கருமை நிறம் கொண்டது.பனை உலகில் ஏழு நாடுகளில் உள்ளது..அதில் நம் ஆசிய கண்டத்தில் நம் இந்தியாவில் நம் தமிழ்நாட்டில் தான் அதகம் ஆகவேதான் நம் மாநில மரமாக அது அங்கம் வகித்தது..ஆனால் இன்று?

அதை தேடி விதை என்ற விழிப்புணர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது…பனைமரத்தினால் பல பயன்கள் உள்ளன அதன் அடி முதல் நுனி வரை எல்லா பகுதிகளும் பயன்பாடுகள் கொண்டவை..யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழி பனைமரத்திற்க்கும் பொருந்தும்.ஆகவேதான் பனை மரம் நம் வாழ்வியல் உடன் இணைந்த ஒன்றாகும்

பனைமரங்களில் மொத்தம் 34 வகை உள்ளன..பனைமரம் நெடுங்காலத்துக்கு பயன் தருவதால் அதனை தேவலோகத்து கற்பகத்தரு என காப்பியங்களில் ஒப்பிடுகிறார்கள்… ஏனென்றால் கேட்பதை தருவதால்…அந்த பெயர் உண்டாயிற்று அடுத்த தொடரில் பனையின் வகை அதன் தாவரவியியல் பெயர் பயன்களை பற்றி எழுதுகிறேன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்….

அன்புடன்…
அகரம் இள.ஆனந்த்.

About ThagavalAdmin@123

Check Also

தொல்லுயிர் வரலாறு ஆவணப்படுத்தும் எம் ஆர் சி கல்லூரி.

தொல்லுயிர் வரலாறு ஆவணப்படுத்தும் எம் ஆர் சி கல்லூரி. 35000 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கால அளவில் தற்போதுள்ள அரியலூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *