mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்

அரியலூர்,ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்க்கு ஒன்றிய செயலாளர் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அழகர்சாமி பங்கேற்று பேசினார்.

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்க்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்

நகராட்சி வார்டு அனைத்திலும் கொசு மருந்து அடித்து சுகாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். ஜெயங்கொண்டம் நான்கு சாலை சந்திப்பில் சாக்கடை வெளியேறுவதை தடுத்து சிமென்ட் காங்கிரீட் அமைக்கவேண்டும். ஜூபிலி சாலையில் வடிக்கால் வசதி செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. . மாவட்ட செயலாளர் மணிவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் துரைராஜ், பத்மாவதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் உத்திராபதி,முத்துசாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

About ThagavalAdmin@123

Check Also

பொறுப்புள்ள பொறியாளர் இவருங்க என நம்மை கடந்து சென்ற ஒரு இளைஞரை கை காட்டினார்கள் அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவர்கள்.

பொறுப்புள்ள பொறியாளர் இவருங்க என நம்மை கடந்து சென்ற ஒரு இளைஞரை கை காட்டினார்கள் அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவர்கள். பெரம்பலூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *