பள்ளி வளாகத்தை தூய்மைசெய்த ஆசிரியருக்கு குவியும் பாராட்டு
தமிழக அரசு பள்ளிகல்விதுறை அறிவிப்புக்கு பின்னர் இன்று 19.01.2021 பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டன. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள பெரியாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருக்கும் சந்திர.கௌதமன் பள்ளிக்கு வந்தபோது நீண்ட கால கொரோனா விடுமுறையால் பள்ளி வளாகம் முழுவதும்,படர்ந்திருந்த புற்கள் மற்றும்நெருஞ்சி முற்களை சுத்தம் செய்ய தனது சொந்த பணத்தில் டிராக்டரை வரவழைத்து செடி கொடிகள் அகற்றி பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினார்.
இக்காட்சியை கண்ட பொதுமக்களும் பெற்றோர்களும் ஆசிரியரை பாராட்டி சென்றனர். தமிழ் ஆசிரியரான முனைவர் சந்திர.கௌதமன் தன்தாயார் மற்றும் தம்பி பெயரில் தனலெட்சுமி அம்மையார் நினைவு, குரு நற்பனி மன்றம், என ஆரம்பித்து படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி சம்பந்தமான உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.