mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / பிறந்தநாளில் பெரிதும் உதவிய திருச்சி சிறுவன். குவியும் வாழ்த்துக்கள்.

பிறந்தநாளில் பெரிதும் உதவிய திருச்சி சிறுவன். குவியும் வாழ்த்துக்கள்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய்ஆனந்த் இவர் தனியார் தொலைக்காட்சி நிருபராக உள்ளார்.
விஜய்ஆனந்த் ப்ரீத்தா தம்பதியின் செல்லமகன் விஜேஷ்ராம். எட்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவனுக்கு இன்று பிறந்தநாள்.

தனது பேரனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துதெரிவித்து ஆசீர்வதித்த தாத்தா பேரன் ஆசையாய் கேட்டிருந்த சைக்கிள் வாங்க ரூபாய் பத்தாயிரத்தை கொடுத்து இன்பஅதிர்ச்சி ஏற்படுத்தினார்.

இந்த தொகையில் தற்போது சைக்கிள் வாங்குவதை காட்டிலும் கொரானா போருக்கு எதிராக நிதிக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதே தனது பிறந்தநாள் ஆசையென விஜேஷ்ராம் கூறியதை கேட்ட குடும்பத்தினர் ஆச்சர்யமடைந்ததோடு அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக
திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தமிழக அரசின் கொரானா நிதிக்கு விஜேஷ்ராம் நிதியளிக்க ஏற்பாடு செய்தனர். சைக்கிள் வாங்கும் கனவை காட்டிலும் அரசுக்கு உதவும் நிஜத்தை செய்து காட்டிய சிறுவனின் செயலுக்கு பலதரப்பட்ட மக்களிடம் இருந்து பாராட்டும் வாழ்த்தும் குவிந்து வருகிறது.

About ThagavalAdmin@123

Check Also

சிறுகதை

சிறு கதையை காண இங்கே கிளிக் செய்யவும் Share on: WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *