புது மணப்பெண் குரங்கனி காட்டு தீயில் சிக்கி உயிரிழந்த பரிதாபம். நாற்பது நாளில் முடிந்த மணவாழ்வு
தேனி மாவட்டம் குரங்கனி காட்டு தீயில் சிக்கி செங்கல்பட்டை சேர்ந்த புதுமண தம்பதியும் மென்பொருள் நிறுவன ஊழியருமான புனிதா உயிரிழந்தார்
செங்கல்பட்டு ஜே.சி.கே.நகர், தாழம்பூ தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் இவரது மகள் புனிதா மென்பொறியாளரானஇவர் கேளம்பாக்கத்தில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவருக்கு கடந்த 28-01-2018 அன்று ஸ்ரீபெரும்பதூர் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருடன் வல்லகோட்டை முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் புனிதா
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கனி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற குழுவில் இடம் பெற்று இருந்தார் வனப்பகுதிக்குள் பரவிய பயங்கர காட்டுத் தீயில் சிக்கி பலத்த காயமடைந்த புனிதா மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். புதுமண பெண் இறப்பு அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது