பெரம்பலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்துக்கு, ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ரெங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பி.பிரகாஷ், எஸ்.மல்லீஸ்குமார், எஸ். சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலர் ஆர்.அழகர்சாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை திரும்ப பெறுவதோடு, விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசே ஏற்க வேண்டும். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், நடவடிக்கை எடுக்காத நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தின் செயலை கண்டிப்பது.
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர வேண்டும். வாகனத்துக்கான காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். வீட்டுவசதி வாரியம் மூலமாக ஆட்டோ தொழிலாளர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும். புதிய சாலை பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும். மானியத்தில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் பி. முத்துசாமி, ஏ. கணேசன், ஆர். ராஜகுமாரன், சி.சண்முகம் உள்பட அனைத்து வகையான வாகன ஓட்டுநர்களும் கலந்துகொண்டனர்.