போக்குவரத்து கழங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியது இதற்கு பலதரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.வேறு வழியி ல்லை ஏற்கத்தான் வேண்டும் என அரசு தரப்பில் கூறபட்டு வந்த நிலையில் தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இது குறித்து ஒரு ஆய்வறிக்கை தயாரித்தார்.
இதில் கட்டணசுமை மற்றும் தொழிலாளர்கள் நலன் பற்றிய தகவல்கள் திரட்டபட்டன. இந்த ஆய்வறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்க திமுக தரப்பில் நேரம் கேட்கபட்டிருந்தது அதன்படி
இன்று மதியம் முதல்வர்- எதிர்கட்சி தலைவர் சந்திப்பு நடைபெற்றது. தாங்கள் தயாரித்த
ஆய்வறிக்கையை முதல்வரிடம் ஒப்படைத்தார்.
திமுக ஆய்வறிக்கையில் உள்ள 27 கோரிக்கைகளை அமல்படுத்தினால் பஸ் கட்டண உயர்வு தேவையில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
போக்குவரத்து கழக இழப்பீடுகளை அரசே ஏற்க வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்களுக்கான மானியங்களை வெளிப்படையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் .
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகையை மாதாமாதம் உரிய கணக்கில் செலுத்த வேண்டும்.
எரிபொருள் விலை உயர்ந்தால் மக்களை பாதிக்காத வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்த கூடாது
போக்குவரத்து கழங்களுக்கு கூடுகட்டும் வேலை அரசு போக்குவரத்து கழக்கத்திடமே ஒப்படைக்கவேண்டும், பெட்ரோல் டீசலுக்கு மாநில அரசு பத்து சதவிகித வரியை மட்டும் விதிக்க வேண்டும் என 27 கோரிக்கைகள் திமுகவின் ஆய்வறிக்கையில் இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
இதே போல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையின் போது பொது நலன் கருதி வெள்ளநிவாரண தொகை வழங்க நேரம் கோரப்பட்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து திமுக சார்பில் நிவாரண தொகையை மு.க. ஸ்டாலின் வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது.