mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / மகத்தான மருத்துவர் அன்னை சாந்தா மறைந்தார்

மகத்தான மருத்துவர் அன்னை சாந்தா மறைந்தார்

மகத்தான மருத்துவர் அன்னை சாந்தா மறைந்தார்.

மருத்துவ உலகில் மகத்தான சாதனைகள் படைத்த புற்றுநோய் சிகிச்சைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மருத்துவர் சாந்தா அவர்கள் மறைந்தார்.

1927 மார்ச் 11ல் சென்னையில் பிறந்தார். மருத்துவ கல்லூரியில் 1949 ல் டாக்டர் பட்டமும், 1955 ல் எம்.டி பட்டமும் பெற்ற அம்மையார் அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் டாக்டராக தன் பணியை தொடங்கி அவரது குருவான கிருஷ்ணமூர்த்தியுடன் உலகத் தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமாக வளர்த்தெடுத்தார்.

கேன்சர் என்றால் மரணம் நிச்சயம் என்ற எண்ணத்தை மாற்றி மருத்துவத்தால் சரிசெய்து உயிர்பிழைக்கலாம் என்ற நம்பிக்கையை சாந்தா தொடர்ந்து உருவாக்கினார். மகசேசே, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா, அவ்வையார், அன்னை தெரசா விருதுகள் வரிசை கட்டி பெருமை சேர்த்தன அதில் வரும் பணம் முழுவதும் கேன்ஸர் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே செலவு செய்தார்.

மகத்தான மாமணி என மருத்துவ உலகமே கொண்டாடிய அம்மையார் சாந்தா தனது தொன்னூற்றி நான்காம் வயதில் தன் மருத்துவ பயணத்தை நிறுத்திக்கொண்டார் மக்கள் மனதில் என்றும் மாறா அன்போடு போற்றப்படும் டாக்டர் சாந்தா விஞ்ஞானிசர். சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா. என்பதும் குறிப்பிடதக்கது

About ThagavalAdmin@123

Check Also

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.   செந்துறை ஒன்றியம் மணக்குடையான் ஊராட்சிக்கு உட்பட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *