mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / மகத்துவம் நிறைந்த மார்கழி கொண்டாட தயாராவோம்

மகத்துவம் நிறைந்த மார்கழி கொண்டாட தயாராவோம்

கேசவா, மாதவா, மணிவண்ணா என வைணவர்களும், ஹரனே, சிவனே, ஆதியும் அந்தமும் ஆன ஜோதி என சைவர்களும் ஒருங்கே வணங்கும் மாதம் மார்கழி

கண்ணன் கீதையில் சொல்கிறான் மாதங்களில் நான் மார்கழியென அதனால் தான் பீடுடைய மாதம் என்ற பெருமையுடைய மாதமாய் திகழ்கிறது.

அதிகாலை நாலரை மணி முதல் ஆறுமணி வரை பிரம்ம முகூர்த்ததில் மார்கழி திங்கள் மதி நிறை நன்னாளில் என்ற ஆண்டாள் திருப்பாவையும் , போற்றி என் முதலாகி பொருளே புலர்ந்த்து பூங்கழல் என்ற மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சியும் களை கட்ட தொடங்கும்.

பெண்கள் அதிகாலையில் குளித்து வாசலில் வண்ண வண்ண கோலமிட்டு, விளகேற்றி ,மலரிட்டு இறையை வீட்டுக்கு அழைப்பார்கள் தொன்று தொட்டு நடக்கும் ஆன்மீக நிகழ்வுகளாய் திகழும் மார்கழி மாத காலத்தை பற்றிய அறிவியல் கருத்தென்ன என பார்த்தால்

வான் வெளியில் உள்ள காற்று மண்டலத்தில் இருந்து ஓசோன் வாயு அதிகாலையில் அதிகம் கலந்து வருவதால் நடை பயிற்சி மேற்கொள்ளும் போது நாம் சுவாசத்தில் கலந்து உயிர்செல்கள் புத்துணர்வு பெறுகின்றன என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆன்மீகமும் , அறிவியலும் கொண்டாடும் மார்கழியை நாமும் கொண்டாடுவோம்.

எம்.எஸ். மதுக்குமார்

About ThagavalAdmin@123

Check Also

சிறுகதை

சிறு கதையை காண இங்கே கிளிக் செய்யவும் Share on: WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *