மகளிர் தின மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
அரியலூர் அரசு கலைக் கல்லூரி, மாவட்ட சமூக நலம் சத்துணவுத் திட்டம், மற்றும் சென்னை பி.எச்.பி மோட்டார்ஸ் கிளப் சார்பில் பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.
மகளிர் தினத்தை கடைபிடிக்கும் விதமாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் .விஜயலட்சுமி கொடியசைத்து தொடக்கி வைத்த பேரணி அரசு கலைக் கல்லூரியில் இருந்து அரியலூர் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது .
பேரணியில் , பெண்கள் பாதுகாப்பிற்கான இயற்றப்பட்ட சட்டங்களான குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம், பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச்சட்டம், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் ஆகிய சட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது .
பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு வினாடி-வினாவில் வெற்றிப் பெற்ற கருத்தரங்கில் சிறப்பாக கலந்துரையாடிய மாணவிகளுக்கு பாராட்டும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
,மாவட்ட சமூக நல அலுவலர் ப.பூங்குழலி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.லோகேஸ்வரி,சென்னை பி.எச்.பி. மோட்டார் கிளப் நிறுவனர் கவுசிக்மூர்த்தி, அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொ) சிற்றரசு மற்றும் மாணவ,மாணவியர்கள்,பேராசிரியர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் .