மகாசிவராத்திரியை முன்னிட்டு பதினோராம் ஆண்டாக சிவபூஜை பொருட்கள் பெற ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினர் அழைப்பு
சிவ வழிபாடுகளில் முதன்மையான வழிபாடாகிய மகாசிவராத்திரி விழா வருகிற 13-2-2018 செவ்வாய்கிழமை இரவு சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது.
தங்கள் பகுதியில் உள்ள வருவாய் குறைவான சிவ ஆலயங்கள் வெட்டவெளியில் உள்ள சிவலிங்கங்கள் ஆகியவற்றுக்கு
மகாசிவராத்திரி வழிபாடு செய்யவிரும்பும் சிவனடியார்கள் சிவ அன்பர்கள்
வழிபாட்டிற்குரிய அபிஷேகப் பொருட்கள், வஸ்திரங்கள், எண்ணெய் முதலியவற்றை வழங்க இவ்வருடமும் கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் தயாராய் உள்ளது
மகா சிவராத்திரி வழிபாட்டு பொருட்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் நேரிலோ கீழ்கண்ட தொலைபேசி எண்ணிலோ தொடார்பு கொள்ள வேண்டுகிறோம்.
ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம்,
ருக்மணி அம்மாள் நகர்
செட்டி மண்டபம், கும்பகோணம்.
தொலைபேசி எண்
0435-2413131