மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் மாரடைப்பால் காலமானார்
மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி அரியலூர் மாவட்டம் திருமானூர் தேநீர் கடை வீதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார் உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தூக்க முயன்றபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ள அகில இந்திய தலைவர் தங்க.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளது
மக்கள் சேவை இயக்க மாநில தலைவரின் இழப்பு அனைத்து விவசாய சங்கங்களையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கி உள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய இயற்கை அன்னையிடம் பிரார்த்தனை செய்வோம். கதிராமங்கலம் , நெடுவாசல் உள்ளிட்ட முக்கிய போராட்டங்களில் பங்கெடுத்தவர். சிறந்த போராளி. மக்கள் சேவை இயக்கத்துக்கும் எனக்கும் மாபெரும் இழப்பாகும். அன்னாரது உடல் இன்று மாலை தஞ்சை மாவட்டம் வில்லியம் நல்லூரில் நல் அடக்கம் செய்யப்படும் என்பதனை மக்கள் சேவை இயக்க அகில இந்திய தலைவர் என்ற முறையில் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்
மறைந்த கிருஷ்ணமூர்த்தி அரியலூர் மாவட்டம் பாளையபாடி கிராமத்தில் பிறந்தார். பின்னர் திருவையாறு அருகே உள்ள வில்லியநல்லூரில் தங்கி வாழ்ந்து வந்தார். இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எளிய வாழ்வின் அடையாளமாய் எல்லோராலும் பார்க்ப்பட்டவர் மறைந்த மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி.