மணப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டுவிழா
புதிய மாணவர் சேர்க்கை விழா தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
செந்துறை கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி இராசாத்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுபொருட்களையும் வழங்கி வாழ்த்திப்பேசினார்.
சிறப்புவிருந்தினாராக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கலந்து கொண்டு வரும் (2018-2019) ம் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கையினை தொடங்கிவைத்து இந்தியா சிமெண்ட் நிறுவனம் வழங்கிய சீருடை,செந்துறை ஞானாம்பாள் பேங்கர்ஸ் வழங்கிய டிபன் கேரியர்,அசாவீரன்குடிக்காடு திருவள்ளுவர் ஞான மன்றம் வழங்கிய அடிப்படை ஆங்கில நூல்களையும் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
.மேலும் நடப்பு கல்வி ஆண்டில் தமது பள்ளியில் மாவட்ட அளவில் அதிக(44) எண்ணிக்கையிலான மாணவர்களை சேர்த்தமைக்காக பள்ளித்தலைமையாசிரியருக்கு பொன்னாடை அணிவித்தும், பாராட்டுச்சான்றிதழ் வழங்கியும் பள்ளிவளர்ச்சிக்கு பாடுபடும் ஆசிரியை களுக்கு பாராட்டும் தெரிவித்தார்.
பள்ளி தலைமையாசிரியர் சிவமூர்த்தி முன்னிலை வகித்து பேசியத உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் மதலைராஜ் அவர்கள் மணப்பத்தூர் கிராமமக்கள் பள்ளிக்கு ₹75000 மதிப்புள்ள பொருட்களை கல்விச்சீர் வழங்கியதையும், சமூக ஆர்வலர் சோழன் குமார் அவர்கள் ₹25000 மதிப்பிலான இன்வெர்ட்டர் வழங்கியதையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் குணசேகரன் ஆசிரியை நாகஜோதி ஆசிரியை கன்னிகா ஆசிரியை அன்பரசி ஆசிரியை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டன் குழந்தைகள் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.