மதுரையில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொதுக்குழு 2018-ஆம் ஆண்டை ஊழல் எதிர்ப்பு ஆண்டாக கடைபிடிக்க தீர்மானம்
இன்று மதுரையில் நடந்த பாமக பொதுக்குழுவில் அதன் நிறுவனர் இராமதாஸ்,, டாக்டர் அன்புமணி, கோ.க.மணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்
தமிழகத்தின் அனைத்து துறையிலும் ஊழல் பரவி உள்ளது தேர்வாணையம் தொடங்கி காவல்துறை வங்கி டாக்கி வரை எதையும் ஊழல் விட்டு வைக்க வில்லை தமிழ்நாடு இனி ஊழல்நாடு என கூறுமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
அரசு நிர்வாகத்தில் ஊழல் நடப்பதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே தேசிய அளவில் லோக்பால், மாநில அளவில் லோக் அயுக்தா போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் ஊழல் செய்ய எந்த தடையும் இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. 21 மாநிலங்களில் லோக் அயுக்தா உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என்பதே ஊழல் ஒழிப்பில் அரசுக்கு அக்கறை இல்லை என்பது உண்மை
அரசுத் துறைகளில் ஊழல் ஒழிப்பு ஆயுதமான பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகும். சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பட்டா உள்ளிட்ட சான்றுகளை வாங்குவதில் தான் அரசு அலுவலகங்களில் ஊழல் தொடங்குகிறது. இதைத் தடுத்து அனைத்து சான்றிதழகளும் விண்ணப்பித்த சில நாட்களில் வழங்குவதை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் நோக்கம். ஆனால், 21 மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இச்சட்டம் தமிழகத்தில் மட்டும் இல்லை.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு தகவல் ஆணையம் செயல்படாமல் உள்ளது அதிமுகவுக்கு ஆதரவான அதிகாரிகளும், நிர்வாகிகளும் தான் இந்த ஆணையத்தின் தலைமை ஆணையராகவும், ஆணையராகவும் நியமிக்கப்படுகிறார்கள். இதனால் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் அடியோடு சிதைந்து விட்டது.
பேரழின் விளிம்பில் உள்ள தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் அரசு நிர்வாகத்தில் காணப் படும் ஊழலை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதற்கான அறவழிப் போராட்டம், சட்டப்போராட்டம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 2018-ஆம் ஆண்டை ஊழல் எதிர்ப்பு ஆண்டாக கடைப்பிடிக்க பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.
முதல்கட்டமாக ஊழல் ஒழிப்பு அமைப்புகளாக லோக் அயுக்தா, பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும், தமிழ்நாடு தகவல் உரிமை ஆணையத்திற்கு அப்பழுக்கற்ற பொதுவாழ்வுக்கு சொந்தமானவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி. 2018-ஜனவரி மாதத்தில் சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அனுமதிக்க தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்றும் இந்தப் பொதுக்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த பொதுக்குழுவில் தமிழகத்தின் அனைத்து பகுதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி பிமுகர்கள்,, மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.