mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / மயிலாடுதுறை பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் முப்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கபடுவதாக புகார்

மயிலாடுதுறை பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் முப்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கபடுவதாக புகார்

மயிலாடுதுறை பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் முப்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கபடுவதாக புகார்

எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கிராம பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கபட்டு அரசு பேருந்துகள் இயக்க வழித்தடங்கள் ஏற்படுத்த பட்டன

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்ட மயிலாடுதுறை இரும்புலிகுறிச்சி செந்துறை வழிதட பேருந்து கடந்த 7 மாதங்களாக இயக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்

இதனால்
இரும்புலிக்குறிச்சி பரணம் உஞ்சினி பிலாகுறிச்சி வீராக்கன் பாளையகுடி வாளரகுறிச்சி நாகல்குழி குமிழியம் உள்ளிட்ட முப்பது கிராம சுற்றுவட்டார மக்கள் ஜெயங்கொண்டம் – மயிலாடுதுறை போன்ற நகரத்திற்கு கல்வி, தொழில், விவாசயம், மருத்துமனை போன்ற அத்தியாவசிய பயணம் மேற்கொள்வதற்கு .
பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும்

மயிலாடுதுறை பேருந்து ஜெயங்கொண்டம் பணிமனைக்கு மாற்றபட்டது முதல் சரியான வசூல் இல்லை என அதிகாரிகள் காரணம் சொல்லி பேருந்தை நிறுத்திவிட்டார்கள் இதுகுறித்து

அம்மா அழைப்பு மையத்தில் கடந்த ஆண்டு தொடர்ந்து புகார் பதிவிடபட்டும்
பேருந்து இயக்க வேண்டி மூன்று முறை கடந்த ஆண்டு கிராம சபை தீர்மானம் நிறைவேற்பட்டு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை

சேவை நிறுத்தப்பட்டதால்
செந்துறை முதல் உடையார்பாளையம் வரை உள்ள விவசாய பெருங்குடி மக்கள் கூலி வேலை செய்வதற்காக டெல்டா பகுதியான மாயவரம், பந்தநல்லூர் திருபனந்தாள் போன்ற ஊர்களுக்கு தை மாதம் முதல் பங்குனி வரையிலும் பேருந்தினை நம்பி விவசாய வேலைக்கு செல்வார்கள் இன்று பஸ் மாறி மாறி மாயவரம் நகரத்திற்கும் அதனை சுற்றி உள்ள 50 ஊர்களுக்குசென்று விவசாயபணிகளை மேற்கொண்டு வீடு திரும்புவது சிரமமாக உள்ளதாக இரும்புலிகுறிச்சி சுற்று வட்டார மக்கள் தெரிவிக்கின்றனர்

அடிதட்டு மக்கள் பயணிக்க அதிகாலை முதல் பஸ்சாகவும், இரவு வீடு திரும்ப கடைசி பஸ்சாகவும் எம்ஜிஆர் ஆட்சியில் அவர் விட்ட பஸ்சை நிறுத்தி உள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

About ThagavalAdmin@123

Check Also

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *