மருதூர் கிராமசபை கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் ஆத்திரம் போலீசார் சமாதானம்
அரியலூர் மாவட்டம் மருதூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை கிராமசபை கூட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் கிராமசபை கூட்டம் நடைபெற்ற உள்ள இடத்தில் பொதுமக்கள் காலையிலிருந்து காத்திருந்தனர் மதியம் ஒரு மணி ஆகியும் எந்த அதிகாரியும் கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு வரவில்லை இதனால் ஆத்திரமடைந்த மருதூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர் தகவலறிந்த செந்துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதிகாரிகள் வர ஏற்பாடு செய்தனர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அதிகாரிகள் வந்த பின்பு கிராம சபை ௯ட்டதில் பங்கேற்றனர். கிராமசபை கூட்டத்திற்கே போராட்டம் நடத்தவேண்டியதை நினைத்து மருதூர் கிராமத்தினர் நொந்துகொண்டனர்.