மிளகாய் பொடி திருடர்களால் மஞ்சள் கயிற்றுக்கு மாறும் பெண்கள்.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஸ்ரீராம் பள்ளி தெருவில் வசிப்பவர் பச்சமுத்து மனைவி பத்மா(60) தனது வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த போது அவ்வழியாக வந்த இளைஞர் தண்ணீர் கொடுங்கள் என கேட்டு தண்ணீர் எடுக்க எழுந்த போது கண்ணில் மிளகாய் பொடி தூவி மூன்று பவுன் செயினை பறித்துக்கொண்டு உடன்வந்தவரின் இருசக்கரவாகனத்தில் தப்பி சென்றனர்.
இதே பாணியில் கடந்த ஒரு மாதத்தில் முத்து நகர் பழனியம்மாள் இராமசாமி நகர் சகுந்தலா என்ற பெண்களிடம் நகையும். இரயம்புரம் நதியா என்ற பெண்ணிடம் இருசக்கர வாகனமும் பறிக்கப்பட்டுள்ளது.
இதனால் தனிமையில் வயல்வேலை, மாடுமேய்ப்பு, மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கசரடுகளை கழற்றிவிட்டு மஞ்சள் கயிற்றுக்கு மாறிவருகின்றனர். இந்த தொடர்திருட்டு குறித்து செந்துறை காவல்நிலையத்தார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.