மீனாட்சி ராமசாமி கல்லூரியில் மாநில அளவிலான பேஸ்கட்பால் வாலிபால் போட்டி கோவை அணி சாம்பியன் பட்டம் வென்றது
தமிழ்நாடு உடற்கல்வயியல் மற்றும் விளையாட்டு பல்கலைகழகம் கல்லூரி ஆகியவை இணைந்து மாநில அளவிலான பேஸ்கட்பால் மற்றும் வாலிபால் போட்டியை தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 17ம் தேதி முதல் நடத்தினர் கல்லூரி தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் தலைமையில் நடைப்பெற்ற முதற்கட்ட போட்டியை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைகழக பதிவாளர் முனைவர்
ராதகிருஷ்ணன் வாலிபால் போட்டியையும், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைகழக தொலைதூரா கல்வி இயக்குனர் சத்தியகுமார் பேஸ்கட்பால் போட்டியையும் துவக்கி வைத்தனர். தமிழகத்தை சேர்ந்த கோவை, திருச்சி, மதுரை, அரியலூர், கரூர், திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின.
பேஸ்கட்பால் போட்டியில் கரூர் சேரன் அணிகளும், கோவை மாருதி அணிகளும் மோதின. இதில் 71:61 என்ற கோல் கணக்கில் கோவை மாருதி அணி வென்று கோப்பையை தட்டிச்சென்றது. இதேபோன்று வாலிபால் போட்டியில் சென்னை ஒய்.எம்.சி அணிகளும், கோவை மாருதி அணிகளும் மோதின. இதில் 25:16. 25:23, 25:17 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வென்று கோவை மாருதி அணி வென்று சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது. இதைத்தொடர்ந்து நடைப்பெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரி தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமாணிக்கம், கல்லூரி முதல்வர் தங்க.பிச்சையப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணி தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.