முடிதிருத்துவோர் மற்றும் மருத்துவ நல சங்க முப்பெரும் விழா
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் முடிதிருத்துவோர் மற்றும் மருத்துவ நல சங்க முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநில துணைத்தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். விழாவில் சங்க மாநில தலைவர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். துணை செயலாளர் சபரிநாதன் சங்கத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மல்லிஸ்பாபு, சண்முகம், சங்கர், ராஜா, ஆகியோர் கோரிக்கைகள் பற்றி விளக்கி பேசினர். விழாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் நமது சமூகத்திற்கு தமிழக அரசின் அனைத்து சலுகை விலையிலும் 5 சதம் இட ஒதுக்கீடு கோரி தீவிரமாக போராடுவது, சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னையில் அறக்கட்டளை மூலம் சொந்த கட்டிடம் கட்டுவது, நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கும் முடிதிருத்தும் தொழிலாளர்களின் ஓய்வூதிய தொகையாக ரூபாய் 5000 பெற்று தருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுரேஷ்குமார் நன்றி கூறினார். முன்னதாக தா.பழூர்
அண்ணாசிலையிலிருந்து கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக மீண்டும் அண்ணாசிலைக்கு வந்து முடிவடைந்தது.