mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Uncategorized / முன்னாள் மாணவர்களால் மிளிர காத்திருக்கும் பள்ளி

முன்னாள் மாணவர்களால் மிளிர காத்திருக்கும் பள்ளி

முன்னாள் மாணவர்களால் மிளிர காத்திருக்கும் பள்ளி.

அரியலூர் மாவட்டம் செந்துறையில் செயல் படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டுதுவங்கபட்டது.ஆரம்பத்தில் பொதுபள்ளியாக இருந்து பின்னர் காலகட்டத்தில் ஆண்கள் மேல்நிலைபள்ளியாக மாறியது.

பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களின் பராமரிப்புபணிகள் நீண்டகாலமாக கிடப்பில் இருந்ததால். பள்ளியின் தோற்றம் மங்குவதை அறிந்த முன்னாள் மாணவர்கள் சிலர் தற்போது
நல்ல நிலையில் உள்ளனர் அவர்கள் ஒன்றிணைந்து பள்ளி வளாகத்தை தூய்மைபடுத்தும் பணியை மேற்க்கொண்டுள்ளனர். இதன் முதல் கட்டமாக வெள்ளை அடித்து வர்ணம் பூசும் வேலையை துவக்கியுள்ளது.

இது பற்றி முன்னாள் மாணவரில் ஒருவர் தனது பெயரோ, புகைபடமோ வேண்டாம் என்றபடியே சொன்னது.  நான் இன்று நல்லநிலையில் உள்ளதற்க்கு அடிதளம் அமைத்து கொடுத்தது எனது பள்ளியும் அதன் ஆசிரியர்களும் தான். எங்களை பட்டை தீட்டிய பள்ளியை மிளிர வைப்பதன் மூலம்   நன்றிகடன் செலுத்துகிறோம். முதல் கட்ட பணி முடிந்ததும் அடுத்த கட்டமாக கழிவறை வசதி ஏற்படுத்த உள்ளோம். விளம்பரம் ஏதுமின்றி தொடங்கியுள்ள இச்சேவையில் இணைய விரும்பும் முன்னாள் மாணவர்கள். பள்ளி உயர் அதிகாரிகளையோ,ஆசிரியர்களையோ தொடர்பு கொள்ளலாம்.என்றார்

பகட்டு ஏதுமின்றி மேற்க்கொள்ளும் இப்பணி முன்னாள் மாணவர்கள் மத்தியில் ஊக்கத்தையும், பொதுமக்கள் மத்தியில் நல்ல முற்ச்சி என்ற தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

About ThagavalAdmin@123

Check Also

அரசுப்பள்ளியை ஊக்குவிக்கும் தொழிலதிபர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கீழராயம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி இவர் சுத்திகரிப்பு குடிநீர் , மற்றும் புகையில்லா இருசக்ரவாகன …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *