முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செந்துறை சிவதாண்டேஸ்வரர் ஆலயத்தில் அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் செல்வம் சிறப்பு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்திருத்தார்.
மதியம் பனிரெண்டு மணியளவில் அன்னதானம் வடை பாயசத்தோடு வழங்கும் போது பொதுமக்களில் சிலர் கண்கலங்கினார்கள். என்னவென விசாரித்ததில் இந்த அன்னதானத்தை திட்டத்தை கொண்டுவந்த மகராசி அம்மா…
இன்று இல்லையென்றாலும் அவர் பெயர் சொல்லி ஏழைகளான நாங்கள் மதியம் ஒருவேளையாவது வயிறார உண்ணுகிறோம் என கூறியது. பார்ப்பவர்களை நெகிழ செய்தது. முன்னதாக அதிமுகவினர் அண்ணாசிலை அருகேயுள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவ படத்திற்க்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.