முள்ளுக்குறிச்சி கிராமத்தில் சிறப்பு கால்நடை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
அரியலூர் மாவட்டம் முள்ளுக்குறிச்சி கிராமத்தில் கால்நடை மருத்துவ துறை சார்பாக இன்று நவம்பர் 3 ந்தேதி சிறப்பு கால்நடை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஹமீது அலி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி இராமசந்திரன் மற்றும் துணை தலைவர் சிவசங்கரி நல்லதம்பி ஆகியோர்கள் முன்னிலையில்
துவங்கிய இம்முகாமில் கால்நடை மருத்துவர்கள் சொக்கலிங்கம் , ரிச்சர்ட் ராஜூ , இராமதுரை , தர்மராஜ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர்
கால்நடைகளான மாடுகள் , ஆடுகள் மற்றும் கோழிகளை பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர். பின்னர் மழைகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செயற்கை கருவூட்டல் , தாது உப்பு வழங்குதல் என நிறைவுற்ற இம்முகாமின் மூலம் பசுமாடுகள் 585 , செம்மறியாடுகள் 220 , வெள்ளாடுகள் 1560 , மற்றும் கோழிகள் 200 என மொத்தம் 2, 565 கால்நடைகள் பயனடைந்தன.