ராஜூவ் பிறந்த நாளையொட்டி மத நல்லிணக்க உறுதிமொழி
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடித்து வருகின்றனர் இதையொட்டி அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் எம். விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன்,சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் அ.பூங்கோதை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.