mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள ஆட்சியர் அறிவிப்பு

வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள ஆட்சியர் அறிவிப்பு

வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள  ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டம் ஏரி,குளங்களிலுள்ள வண்டல் மணல் இலவசமாக எடுத்துக்கொள்ள ஆட்சியர் மு.விஜயலட்சுமி அழைப்பு விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் ஆகியவற்றை விவசாயம், சொந்த வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் தயாரித்தல் ஆகியவற்றிற்கு இலவசமாக எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்ததின் அடிப்படையில், கடந்தாண்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,118 ஏரி, குளங்களில் 17,96,508 கனமீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டு, 17,833 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
இது போல் நடப்பாண்டில் 30.5.2018 வரை பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 280 ஏரி மற்றும் குளங்களில் 2,06,475 கனமீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டு, 4,075 விவசாயிகள் வண்டல் மண் எடுத்து பயன்பெற்றுள்ளனர்.

வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள ஏரி மற்றும் குளங்களில் மட்டுமே வண்டல் மண் எடுக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் விவசாய பணிக்கு நஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகளும், புஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடுகளும், சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கனமீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடுகளும், மண்பாண்டம் தயாரித்தல் பணிக்கு 60 கனமீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடு வண்டல் மண்களும் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.
மேலும், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையால் மண்வெட்டி எடுக்க, வரை ஏற்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். எனவே, இந்த திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் அப்பகுதியைச் சார்ந்த வட்டாட்சியர்கள், வளர்ச்சித்துறை அலுவலர், வேளாண் துறை அலுவலர்களிடம் முறையாக விண்ணப்பித்து, உரிய அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு  கூறியுள்ளார்

About ThagavalAdmin@123

Check Also

தொல்லுயிர் வரலாறு ஆவணப்படுத்தும் எம் ஆர் சி கல்லூரி.

தொல்லுயிர் வரலாறு ஆவணப்படுத்தும் எம் ஆர் சி கல்லூரி. 35000 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கால அளவில் தற்போதுள்ள அரியலூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *