வாகன இரைச்சலில் மிரளும் கால்நடைகள். இடம் மாற்ற சொல்லும் சமூக ஆர்வலர்கள்.
செந்துறை பேருந்து நிலையம் தற்போது உள்ள இடத்தின் அருகே கடந்த 1970 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் கால்நடை மருந்தகம் இட மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சுற்றுவட்டாரத்தில் உள்ள இருபது கிராமங்களிலிருந்து வரும் கால்நடைகள் பேருந்து நிலையத்தை தாண்டி வருவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடுவதாகவும். மேலும் சிகிச்சை அளிக்கும் போது வாகனங்களின் ஹாரன் சப்தம் கேட்டு திடீரென மிரளுவதால் மருத்துவர், உதவியாளர்,கால்நடை உரிமையாளர் என அனைத்து தரப்பும் காயம் அடைவதும். இது அடிக்கடி நடப்பதாகவும் கிராமவாசிகள் கூறுகின்றனர்.
பொதுவாக கால்நடை மருத்துவமனைஅல்லது மருந்தகம் என்பது ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள அமைதியான இடத்தில் தான் இருக்கும் ஒரு காலத்தில் கிராமிய சுழலில் அமைதியான இடமாக இருந்த கால்நடை மருந்தகம் தற்போது நகர்புறமாக மாறியுள்ள ஊராலும் பேருந்து நிலையம் மிக அருகிலேயே செயல்படுவதாலும் கால்நடை மருந்தகம் அமைதியற்ற நிலையில் உள்ளது. மேலும் செந்துறை தாலுக்கா தலைமையகமாக இருந்தாலும் இன்னும் கால்நடை மருத்துவ மனையாக தரம் உயர்த்தாமல் மருந்தகமாகவே செயல்பட்டு வருகிறது. இதனால் தலைமை மருத்துவர் , உதவியாளர்கள், பரிசோதனை ஊழியர்கள், இரத்தபரிசோதனைமையம், நோய் அறிதல், என எதுவும் இல்லை என்ற குறையை நீக்கி உள்கட்டமைப்பு வசதிகள் உயரவும் இடம் மாற்றவும் சம்பந்தபட்ட துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது