வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா? முடியும் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார் வேதாரண்யம் அருகேயுள்ள தன்னார்வலர் ஆசிரியர் செல்வகுமார்.
1988 முதல் தனது நண்பன் பாலசுப்ரமணியோடு வானிலை அறிக்கை கேட்பதில் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு படிப்படியாக இயற்கையோடு கலக்க ஆரம்பித்தவரின் உள்ளுணர்வு மெல்ல மெல்ல விரிவடைய நாம் அறியும் தகவலை உலகறிய வேண்டும் என்ற நோக்கில் டீக்கடை, மளிகைகடைகளில் இன்றைய நிலவரம் என வானிலை சம்பந்தப்பட்ட அறிக்கை தயாரித்து ஒட்டிவிடுவார். எல்லா கண்டுபிடிப்புகளும், தத்துவங்களும் கேலிக்குள்ளாகிய பின்புதான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.செல்வகுமாரும் அதற்கு விதிவிலக்கல்ல. படித்த படிப்புக்கு வேலை கிடைக்காது ஆந்திர மாநிலம் ஏனாம் காக்கிநாடா அருகே தனியார் கம்பெனி காசாளர் வேலை கிடைக்க அங்கு சென்றவருக்கு தனது கடல் நண்பன் அருகில் இருப்பதை கண்டு மகிழ்ச்சி தினமும் கடலை நோக்கி வானிலை நிலவரத்தை ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் எழுதி கடைகளில் ஒட்டி வைப்பதை வழக்கமாக செய்துள்ளார்.
ஒரிசா மாநிலத்தை ஒட்டி புயல் கரைகடந்து தாக்கும் என சொல்லி இருந்த காலகட்டத்தில் காக்கிநாடா அருகே கடல் உள்வாங்க மக்கள் மீன்களை பிடிக்க கூடுகிறார்கள் பெரும் காற்றும் அலையும் வரும் என இவர் எச்சரித்த போதும் யாரும் காதில்வாங்கவில்லை திடீரென 250 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று கிளம்பி பெரும் அலை வர கடல் பகுதியே கபளீகரமாகி பத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகவும் தான் இவரை முழுதும் நம்ப தொடங்குகிறார்கள் 2000 வரை ஆந்திராவில் இருந்த செல்வகுமார் ஆசிரியர் பணி கிடைக்கவும் தமிழகம் வந்துவிட்டார்.
அன்றாட ஆசிரியர் பணியோடு வானிலை அறிக்கை தயார் செய்து தகவல் அளிப்பதை தலையாக்கடமையாக செய்து வருகிறார். என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என செல்வகுமார் கூறுவதை கேட்டு விவசாயிகள் பெரும்பாலானோர் விவசாயத்தில் லாபம் அடைவது தொடர்கதை. செல்வகுமாரின் வானிலை தகவலுக்காகவே இவரது நண்பர்கள் லோகநாதன், ரகுராம் ஆகியோர் இணைந்து நம்ம உழவன் என்ற ஆப் ஒன்றை உருவாக்கி உள்ளார்கள். லட்சக்கணக்கானோர் பின்தொடரும் இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இது தவிர தினமும் ஜந்நூறுக்கும் மேற்பட்ட போன்கால்களில் வரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது என பம்பரமாய் சுழலும் ஆசிரியர் செல்வகுமாரிடம்
எதிர்கால வானிலை பற்றி ஏதாவது சொல்லுங்களேன் என்றோம்.
வரும் டிசம்பர் 12 ம் தேதி இலங்கை அந்தமான் இடையே உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சிறு புயலாக உருவாகி தமிழகம் நோக்கி வரும் இதனால் 14,15,16 ஆகிய தேதிகளில் கன மழை பொழியும். இதே போல் வரும் 21, 22,23 ஆகிய தேதிகள் மற்றும் 28,29,30 ஆகிய நாட்களிலும் கன மழை என ஏழு நாளைக்கு ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் இதனால் 2019 கோடையிலும் விவசாயம் நல்லாயிருக்கும் எங்கும் பசுமையா கெடக்கும். அந்த காலகட்டத்தில் மழை நீரை அவசியம் நீர்நிலைகளில் சேகரிக்க தவறினால் வரும் 2020 ல் ஆறு மாதம் கடந்து மிக பெரிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் தண்ணீர் தேவை பெரும் சவாலாக அமையும் எனவே எவ்வளவு சிக்கனமா பயன்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு 2020 ஆண்டின் பின்பாதியை சமாளிக்க முடியும் என எச்சரித்து விடை கொடுத்தார்.
1990 முதல் ஆசிரியரும் தன்னார்வலருமான செல்வகுமார் சொன்னது பொய்த்ததேயில்லை இதற்கு சமீபத்திய உதாரணம் கஜா புயல் வேதாரண்யத்தை குறிவைத்து தாக்கும் இந்தந்த மாவட்டங்கள் பலத்த சேதமடையும் என சொன்னது.
ஆயிரமாயிரம் பாராட்டுகள் நூற்றுக்கணக்கான கேடயங்கள் என அவரை சுற்றி இருந்தாலும் நீர்நிலைகளை சரிபடுத்தி தண்ணீரை சேமிப்பதும் சிக்கனமாய் பயன்படுத்துவதையுமே இந்த தன்னார்வலர் விரும்புகிறார்.
நாம் தயாராவோமா…?
செய்தி: எம்.எஸ்.மதுக்குமார்
2 comments
Pingback: แทง บอล ออนไลน์
Pingback: 토렌트 다운