விதை சேகரிப்பு மரக்கன்று வளர்ப்பில் ஆர்வம் காட்டும் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் சார்பில் விதைகள் சேகரிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து விதைகளை சேகரித்தனர்
புங்கன், பாதாம், வேம்பு,நாவல்,எலுமிச்சை, பனை,நெல்லி போன்ற விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளது.மேலும் அவற்றை
பைகளில் போட்டு மரக்கன்றுகளை உருவாக்கும் பணி நடைபெறுகிறது. இதனடிப்படையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை உருவாக்கும் பணி நடைபெறுகிறது.
இத்தகைய மரக்கன்றுகளை மீனாட்சி இராமசாமி பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கும், மற்றும்
பல்வேறு பள்ளிகள்,கல்லூரிகள்,அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்கள்
பொதுமக்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் மக்கள் கூடும் சந்தை போன்ற பகுதிகளில் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் மீனாட்சி இராமசாமி கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் கிராமங்களில் வீட்டுக்கு இரண்டு மரக்கன்றுகளை இலவசமாக நட்டுத்தரதிட்டமிடப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கான ஏற்பாடுகளை மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் M.R.இரகுநாதன் தலைமையில் இயக்குனர் டாக்டர். ஆர் இராஜமாணிக்கம்,ஆலோசகர் டாக்டர் தங்க.பிச்சையப்பா,
இணை செயலாளர் எம். ஆர்.கமல்பாபு ,
நிர்வாக இயக்குனர்கள் கார்த்திகேயன், செந்தில் குமார்,முதல்வர்கள் டாக்டர் சேகர்,டாக்டர் மதியழகன்,டாக்டர் சங்கீதா,சிவசங்கர் மற்றும் பலர் செய்து வருகின்றனர்