mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / விந்தை மனங்கள்..! எழுத்தாளர் வே.குமரவேல்.

விந்தை மனங்கள்..! எழுத்தாளர் வே.குமரவேல்.

விந்தை மனங்கள்..!

எழுத்தாளர் வே.குமரவேல்.

2)சமுதாயத்தில் சில மனிதர்களை பார்க்கலாம் அவர்களுக்கு முகம் இருக்காது. பத்தோடு பதினொன்றாக இருப்பார்கள் அவர்களுக்கென்று எந்த முகமும் இருக்காது. உதிரிகளாக இருப்பார்கள் ஏன் ? வாழ்கிறோம் என அவருக்கும் புரியாது அடுத்தவர்க்கும் தெரியாது.

” மாற்றம் என்பது மானுட தத்துவம் , மாறாதிருக்க நான் வனவிலகல்ல ” என்றார் கவியரசு கண்ணதாசன். வலிமையுள்ளவன் தயவிலே வாழ்கிறவர்கள் வயிற்றுப்பாட்டை தவிர வேறு வழி வாய்கால் தெரியாதவர்கள். அவர்களுக்கு சமூகத்தில் மட்டுமல்ல வீட்டிலும் மதிப்பு மரியாதை இருக்காது.

‘ வலிமையுள்ளவன் வைத்தது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகனும் தம்பி ‘ என்றும் ‘ என்வாழ்வில் புதுபாதை கண்டேன் ‘ என்றும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு உயர்வு என்பது உறுதி.

 

பணமும் , சொத்தும் உடையவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்பது தோற்ற பிழை. வாழ்க்கையில் பெரும்பாலான நல்ல அம்சங்களையும் அனுபவித்தவனே வெற்றிபெற்றவன் ஆவான்.

‘ அறிவுடையார் எல்லாம்உடையார்’ என்றுதான் வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே தவிர , ‘ பணமுடையார் எல்லாம் உடையார் ‘ என்று சொல்லவில்லை.

பீடுநடை போடுகிறவர்களையும் பார்க்க வேண்டும். கெடுகேட்ட மனிதர்களையும் காணவேண்டும். ஏன் ? என்றால் நம் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள அந்த சிந்தனைகள் உதவும்.

‘ சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு , தென்றலே உனக்கெது சொந்த வீடு ‘
‘ காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி . கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது’ என்று ஒரு தலைமுறையில் எழுதினார் கண்ணதாசன்.

‘ சிட்டுக்கு சிறகடிக்க சொல்லிதந்த்தாரடி ? மீனுக்கு நீச்சல் கற்று தந்தாரு ? வானம்பாடி வாழ்விலே வருந்திஅழுவதில்லை. அது பறக்க மறந்த்தில்லை என்று இந்த தலைமுறையில் எழுதினார் மு.மேத்தா.

தமக்கு சிறகுகள் இருப்பதை எந்த பறவையும் மறப்பதில்லை. ஆனால் மனிதர்கள் தனது திறமைகளை மறந்துவிடுகிறார்கள்.

நாம் புது வடிவம் கொள்வதெப்படி….?

About ThagavalAdmin@123

Check Also

விந்தை மனங்கள்..!

விந்தை மனங்கள்..! எழுத்தாளர் வே.குமரவேல். 1) தொழிலில் நல்ல திறமை இருக்கிறது பல தரபட்ட மக்களிடம் கலந்து பழகி ஒருங்கிணைங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *