விளாங்குடி கைகாட்டியில் மகாசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியிலுள்ள மகாசக்தி மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது..
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.தேர் முக்கிய வீதிவழியாக வந்து முட்டுவாஞ்சேரி சாலையில் பொதுமக்கள் தரிசனத்துக்காக நிறுத்திவைக்கப்பட்டு, மீண்டும் தேர் இயக்கப்பட்டு,அம்மன் சன்னதியை அடைந்தது. பின்னர்,அம்மனுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது, பொதுமக்கள் தேங்காய்களை உடைத்து வழிப்பட்டனர்.
.