வெள்ளூர் சாத்தியப்பா கோவில் கும்பாபிஷேகம் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
அரியலூர் மாவட்டம் வெள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சாத்தியப்பா ஆலயம் மிகவும் பழமையானது இந்த ஆலயத்தை புதிய வடிவில் அமைத்து அதன் கும்பாபிஷேகம் 25.6.18 திங்கள் கிழமை காலை நடைபெற்றது. கடந்த சனிகிழமை மாலை சௌந்தர்ராஜன் சிவாச்சாரியார் தலைமையில் வேதவிற்பனர்கள் கணபதி,லெஷ்மி,நவகிரஹ ஹோமம் ஆகியவைகளை நடத்தி கும்பாபிஷேக நிகழ்ச்சியை துவக்கினர். முறையே அனைத்து காலபூஜையும் நடைபெற்று காலை 9 மணிக்கு மேல் கடம் புறப்பட்டு கணபதி,சாத்தியப்பா, முத்தையா உள்ளிட்ட தெய்வ கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது.
கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி பரவசமடைந்தனர் இந்த வழிபாட்டு தெய்வங்களை வணங்கும் மக்கள் தமிழகத்தின் நூற்றிஜம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கின்றனர் விழா ஏற்பாட்டினை நாட்டாமைகள் , கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வழிபாட்டு மக்கள் செய்திருந்தனர் பாதுகாப்பு ஏற்பாட்டினை செந்துறை காவல்நிலையத்தார் மற்றும் தீயணைப்பு துறையினர் வழங்கினர்.