ஷரியத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஷரியத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாடத்தில், ஷரியத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட தலைவர் முஹம்மர்ரபிக் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட செயலாளர் ஹஸ்ஸான், சிஎப்ஐ மாநில செயற்க்குழு பாத்திமாபர்வின்,மாவட்ட பொதுச்செயலாளர் ஷாஜகான் உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினர்.